யாருக்கும் தெரியாமல் ரசிகர்களுடன் தளபதி விஜய் படம் பார்த்தாரா!!!.. வெளிவந்த அரிய புகைப்படம்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது நம்பர் 1 நடிகர் என்றால் அது விஜய்தான். சமீபகாலமாக தளபதியின் படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வசூல் சாதனை செய்கிறது. விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தின் வெளியீடு கொரோனாவால் சற்று தள்ளிச் சென்று உள்ளது.



இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் தளபதி விஜய்யின் பல சுவாரசியமான விஷயங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. பிரபலங்களும் தங்களுக்குள்ள மறக்க முடியாத ரகசியங்களையும் தற்போது வெளி காட்டி வருகின்றனர்.தளபதி விஜய்க்கு தான் நடித்த படங்களை ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்ததாம். அந்த ஆசையை தனது கத்தி பட வெளியீட்டின்போது நிறைவேற்றி கொண்டாராம்.


ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான படம் கத்தி. இந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சியை முகத்தில் மாஸ்க் கட்டிக்கொண்டு சென்னையில் பிரபலமான காசி திரையரங்கில் பார்த்தாராம் தளபதி விஜய். அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

Comments