Which gun is used in Thalapathy Vijay beast movie ?

BEAST படத்தில் தளபதி விஜய் பயன்படுத்தும் துப்பாக்கி பற்றி தகவல் 


    தளபதி விஜய் தற்போது சன் picture தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில தினங்களில் முடிந்துவிடும் என்று தற்போது தகவல் வந்துள்ளது.

இறுதி கட்ட படப்பிடிப்பிற்க்காக படக்குழு தற்போது ஜார்ஜியா செல்லவுள்ளதாம். மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த படத்தின் First Look போஸ்டரில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி பற்றி பல்வேறுவகையான தகவல் வெளிவந்துள்ளது ,

அதாவது தளபதி விஜய் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி ”ஷார்ட் கன்”Short Gun  வகையை சேர்ந்தது என்றும.

இதில் எப்படி  8 x  ஸ்கோப்பினை பயன்படுத்த முடியும்  என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்றால் 8 x   என்பது ஸ்னைப்பர் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் ஸ்கோப். இது தூரத்தில் இருக்கும் பொருளை எட்டு மடங்கு அருகில் காட்டும் வகையில் இந்த ஸ்கோப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்று பலரும் கருத்து வெளியிட்டார்கள். 

ஆனால் தளபதி விஜய் கையில் வைத்திருக்கும் ஷார்ட் கன் துப்பாக்கி வேட்டையாட பயன்படுத்தப்படும் துப்பாக்கி ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கோப்  LEUPOLD VX   என்று Gun Expert கூறியுள்ளனர் .

இந்த ஸ்கோப் பார்ப்பதற்கு   8 x   ஸ்கோப் போல தோற்றமளித்தாலும், LEUPOLD VX   ஷார்ட் கண்களுக்காக பயன்படுத்தப்படும் ஸ்கோப் வகை என்று அவர் கூறியுள்ளார்.  இது லாங் ரேஞ்ச் துப்பாக்கி சுடுதலின் போது ”ஷார்ட் கன்” துப்பாகிகளில் பயன்படுத்தப்படுகிறது. 

தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மற்றும்  படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்துள்ளார். வில்லனாக முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார்.

Comments