கொரொனா - ரசிகர்களுக்கு பணம் கொடுத்த தளபதி, இந்த மனசு யாருக்கு வரும்!

கொரோனாவிற்கு நிதி உதவிகளை செய்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் தளபதி விஜய்.பொதுவாகவே தளபதி எல்லா சமூகப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பதோடு நிறுத்திவிடாமல் தன்னால் முடிந்த அளவு உதவிகளும் செய்தும் வருகிறார்.

தற்போது கொரோனவினால் உலகம் முழுவதும் பல வகையான பிரச்சினைகள் வந்துள்ளது. இதனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பலரும் சோற்றுக்கே வழியில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் தளபதி விஜய் சமீபத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு கொரானா நிதியாக 1.30 கோடியும், ரசிகர் மன்றங்களுக்கு 50 லட்சமும் கொடுத்து உதவியுள்ளார்.

ஆனால் கொஞ்சமும் நன்றி இல்லாத பலர் தளபதி விஜய் எதுவும் செய்யவில்லை குறை கூறினார். இப்போது விஜய்யை திட்டிய அதே வாய்தான் அவர் உதவி செய்த பிறகு அவரை புகழ்ந்தும்  வருகின்றனர்.ஆனால் தளபதி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மேலும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த கஷ்டத்தில் இருக்கும் தன் ரசிகர்களுக்கு உதவி செய்துள்ளார். இதை மக்கள் இயக்கத்தின் மூலமாக கஷ்டத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு தலா 5,000 வரை அவர்களது வங்கி கணக்கிலேயே செலுத்தி உள்ளாராம்.

https://twitter.com/Yuvarajvijay_95/status/1253625181303525376

அதனை அதிகாரப்பூர்வமாக பல நிர்வாகிகள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளனர். இந்த தகவலால் தளபதி ரசிகர்கள் எங்களைப் பொருத்தவரை தளபதி தான் பாரி வள்ளல் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Comments