தளபதி-65 படத்திற்கு இசையமைப்பாளரை உறுதி செய்த தளபதி விஜய் அதிகாரப்பூர்வ தகவல்

மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் தனது 65வது படத்திற்காக ரெடியாகி வருகிறார். மாஸ்டர் படம் கொரோனவினால் இன்னும் வெளியாகவில்லை.


இந்நிலையில் தளபதி  விஜய் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.மேலும் இந்த படத்தை முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும் சமீபத்தில் துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சம்பந்தமே இல்லாமல் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த தளபதி ரசிகர்கள் துப்பாக்கி-2 படம் தான் உருவாகிறது என தற்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இசையமைப்பாளர் யார் என்பதை இன்னும் தெரியவில்லை. ஏனெனில் துப்பாக்கி படத்தின் முதல் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.ஆனால் சமீபகாலமாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் எந்த படமும் சரியாக அமையவில்லை.
 
இதனால் தளபதி இந்த படத்தின் இசையமைப்பு பணியை பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் தமனை தேர்வுசெய்துள்ளாராம். இதற்க்கு காரணம் சமீபத்தில் தமன் இசையில் வெளியான புட்ட பொம்மா பாடல் உலகம் முழுவதும் ஹிட்டடித்தது தான். அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராம் தமன். மேலும் தமன் விஜய்யிடம் வாய்ப்பு கேட்டதாகவும், விரைவில் இருவரும் சேர்ந்து பணியாற்றலாம் என்று தளபதி கூறியதாகவும் ஒரு பேட்டியில் கூறினார். தற்போது தமனே ஒரு தெலுங்கு சேனலில் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு செம்ம சந்தோஷத்தை அளித்துள்ளது.

Comments