மாஸ்டர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவானதா? வெளியான மாஸ் தகவல்..

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது மாஸ்டர் திரைப்படம். மேலும் தளபதிக்கு முதன்முறையாக வில்லனாக விஜய் சேதுபதியும் நாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர்.




தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன குமார் ஆகியோருடன் மாஸ்டர் திரைக்கதையை எழுதியுள்ள பொன் பார்த்திபன் அவர்கள் பேட்டி ஒன்றில் மாஸ்டர் திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட்டை கூறியுள்ளார்.

அதுஎன்னவென்றால் மாஸ்டர் படத்தின் கதை ஒரு உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே மீண்டும் தளபதி அரசியல்வாதிகளை தெறிக்க விடப் போகிறாரா அல்லது படிப்பு சம்பந்தமாக வருவதால் மறைந்த அனிதா என்ற மாணவியின் கதையை படமாக எடுத்துள்ளார்களா என்ற சந்தேகத்தையும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Comments