மாஸ்டர் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கல் கைகொடுத்து உதவிய தளபதி விஜய்

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால் மாஸ்டர் படம் வரும் தீபாவளிக்கு தான் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாருக்கு , படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பைனான்சியருக்கு அதிக வட்டி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது

இதனை அறிந்த நம்ம தளபதி விஜய் தயாரிப்பாளர் லலித்குமாரின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவருடைய நிறுவனத்திற்கு இன்னொரு படம் நடித்துத் வாக்கு கொடுத்துள்ளாராம் தளபதி விஜய்.இதனால் கஷ்டத்தில் உள்ள தயாரிப்பாளர் லலித்குமாருக்கு தளபதி கைகொடுத்து உதவியுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் தயாரிப்பாளர் லலித்குமார் மிகவும் சந்தோசத்தில் உள்ளார். மேலும் இந்த படம் சன் பிக்சர்ஸ்-ஏஆர் முருகதாஸ் படத்தை அடுத்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments