தளபதி விஜயின் அடுத்த மூன்று பட இயக்குனர்கள் யார் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!!!

தளபதி விஜய் தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருகிறார். இவரது  திரைப்படங்களுக்கு உலக அளவில் மிகபெரிய மார்க்கெட் உள்ளது.



மேலும் தளபதியின் முந்தைய திரைப்படமான பிகில் மிகபெரிய அளவில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் புரிந்தது. அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி கொரோனவினால் படம் வெளியாகாமல் உள்ளது.

மேலும் இந்தப்படம் கொரோனா பிரச்சனைகள் முடிந்தவுடன்  வரும் தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தளபதியின் அடுத்தடுத்த திரைப்படங்களை யார்யார் இயக்குகிறார்கள் மற்றும் தயாரிக்குகிறார்கள் என்ற தகவல்களை சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். அதில்


* தளபதி 65 திரைப்படத்தை சன் பிக்சார்ஸ்  தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்றும்

* தளபதி 66 திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார் என்றும்

* தளபதி 67 திரைப்படத்தை மீண்டும் MASTER படத்தின் படக்குழுவே இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.