உலக அளவில் மருத்துவர்களின் மன அழுத்தத்தை போக்கும் 'மாஸ்டர்' பாடல்


தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’வாத்தி கம்மிங்’ பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தமிழ் மொழியை தெரியாதவர்கள் கூட இந்த பாட்டுக்கு நடனம் ஆடிவரும் வீடியோக்கள் பல சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் மருத்துவர்கள் தங்கள் மன அழுத்தத்தை போக்க ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது .


இதுகுறித்து ஒரு மருத்துவர் கூறும்போது முன்பெல்லாம் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து விட்டு வீட்டுக்கு சென்று ரிலாக்ஸ் செய்வோம். ஆனால் தற்போது வீட்டுக்கு செல்வதையே கிட்டத்தட்ட மறந்து விட்டதால் மருத்துவமனையில் அவ்வப்போது நேரம் கிடைக்க்கும்போது நாங்கள் நடனமாடி எங்களுக்கு நாங்களே ரிலாக்ஸ் செய்து கொள்வோம் என்றும் மேலும் பெரும்பாலோர் நடனம் ஆடும்போது ’மாஸ்டர்’ படத்தின் பாடலையே அவர்கள் பயன்படுத்துவதாகவும் அந்த மருத்துவர் கூறினார்.

இதன்முலம் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் தளபதியின் ’மாஸ்டர்’ பட பாடல்கள் மருத்துவர்களின் மன அழுத்தத்தையும் போக்கியுள்ளது.