மாஸ்டர் ட்ரைலர் பார்த்துவிட்டு மாஸ் அப்டேட் கொடுத்த பிரபல நடிகர் ஓபன் டாக்..

தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் படமாக உள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான தளபதி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கொரானா பாதிப்பால் படம் வெளியாகாமல் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு தற்போது தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் படத்தின் டிரைலர் மட்டும் வெளியாகாமல் உள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.


இந்நிலையில் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் படத்தின் டிரைலரை பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். அதில் அவர்கூறியதாவது நான் தற்போது வரை ஆறு முறை மாஸ்டர் டிரைலரை பார்த்து விட்டதாகவும், மரண மாஸ் ஆக இருப்பதாகவும் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டிரைலரில் தளபதி பேசும் ஒரு டயலாக் வெறித்தனமாக தெறிக்கவிடும் எனவும் கூறியுள்ளார். இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Comments