தளபதியின் மாஸ்டர் படத்தின் பஞ்ச் டயலாக்ஸ் குறித்து எழுத்தாளர் கூறிய மாஸ் அப்டேட் !!!

தளபதி விஜய் முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன்  இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.இதனால் இந்தப்படம் தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா அளவில் ட்ரெண்டாகி வரும் நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் அப்டேட்டுக்காக தளபதியின் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ள போன் பார்த்திபன்( Pon Parthiban ), ஒரு பேட்டியில் மாஸ்டர் படத்தின் பஞ்ச் டயலாக்ஸ் குறித்து பேசியுள்ளார் அதில் சார்த்தனமான டயலாக் போலவே தான் நாங்கள் எழுதியுள்ளோம் ஆனால் அதை தளபதி விஜய் சொல்லும் போது வேற லெவெலில் இருக்கும் கூறியுள்ளார்.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் நிறைய மாஸ் டயலாக்குகளும், மாஸ்ஸாக பல காட்சிகளும் மேலும் நிறைய புது விஷயங்கள் உள்ளதாகவும். அதுமட்டும்மல்லாமல் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்கள் மிகவும் தனித்துவமாக இருக்கும் என்றும் மாஸ்டர் திரைப்படம் நிச்சயமா ரசிகர்களுக்கு மிகபெரிய விருந்தாக அமையும் என கூறியுள்ளார்.