9 வருடம் கழித்து விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை..தளபதி 65 படத்தின் அப்டேட் !!!

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்றே தெரியவில்லை ஏனென்றால் இந்த கொரோனா பிரட்சினை எப்போது முடிவுக்கு வரும் என்றே யாருக்கும் தெரியவில்லை.



இந்நிலையில் தளபதியின் 65 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா காரணமாக தான் இப்படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

இருந்தபோதும் இந்த படத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தன்னா, காஜல் அகர்வால் ஆகிய மூவரில் ஒருவர் தான் நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் இதில் புதியதாக நடிகை அசின் பெயரும் இடம்பெற்றுள்ளது.



இதற்குமுன் தளபதியுடன் அசின் நடித்ததை போக்கிரி, சிவகாசி, காவலன் போன்ற படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளதால் அசினுடன் பேட்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆனால் அசின் மிகப்பெரிய தொழிலதிபரை மந்துள்ளதால் 9 வருடங்கள் கழித்து தளபதி 65 படத்தில் எப்படி நடிக்க அவரது வீட்டில் சம்மதம் கிடைக்குமா பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.