அருண்ராஜா காமராஜ் சொன்ன கதையை கேட்டு தளபதி கூறிய சுவாரிசியமான தகவல்!!!

கனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். இவர் இதற்கு முன்னதாக தெறி, கபாலி, பைரவா, மாஸ்டர் போன்ற படங்களுக்கு பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார்.



இவர் ஒருசில படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். இப்படி தமிழ்சினிமாவில் பலமுதன்மையோடு பணியாற்றிவரும் அருண்ராஜா காமராஜ் கனா படத்திற்கு பிறகு தளபதி விஜயிடம் கதை கூறியுள்ளார்.

தளபதிடம் கதை கூறிய அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார், நாண் தளபதியிடம் கதை கூறியதும் கதை தளபதிக்கு பிடித்திருப்பதாகவும் ஆனால் அந்த கதையில்  நடிப்பதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்றும் அப்படி வரும்போது நான் கண்டிப்பாக கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டாராம்.

ஏனென்றால் அந்த கதை அரசியல் சம்மந்தப்பட்ட கதையாம். என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்களா போல என்று தளபதி விஜய் கூறினாராம். இதனால் தளபதியின் அழைப்புக்காக காத்திருப்பதாக அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.