ட்விட்டரில் புதிய ரெகார்டை தொட்ட தளபதி விஜய்யின் பிறந்தநாள், புதிய சாதனையை வேட்டையாடிய தளபதி ரசிகர்கள் !!!

நம்ம தளபதி விஜய்க்கு தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்த்துவருகிறார். மேலும் தளபதிக்கு உலக அளவில் மிகபெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.



ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர் நடிகைகள் சமூகவலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் அவரது ரசிகர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் #HBDThalapathyVIJAY என்ற ஹாஸ்டேக்கை   உருவாக்கி  சமூக வலைத்தளத்தை அதிர செய்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் டிவிட்டரில் ஒரு கோடிக்கு மேல் ( 10.5 million ) பதிவுகளை பதிவிட்டு தென்னிந்திய சினிமாவில்  எந்த ஒரு நடிகருக்கும் இதுவரை ஒரு கோடி பதிவுகளை ட்விட்டரில் பெற்றதில்லை என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்கள்  தளபதியின் அன்பு நண்பர் நண்பிகள்.


#HBDTHALAPATHYVIJAY