பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்யை பின்பற்றும் தளபதி விஜய் !! எந்த விஷயத்தில் தெரியுமா?

நம்ம தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் தற்போதைய அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்தது வருகிறது.

சமீபத்தில் வெளிவந்த பிகில் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் விரைவில் வெளியாக தயாராக உள்ளது.



இந்நிலையில் தற்போது விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டை புதுப்பித்து கட்டி வருகிறார், அந்த வீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய அணைத்து அம்சங்களும் இடம்பெறுமாறு கட்டி வருவதாகவும் அதில் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் மற்றும் மினி திரையரங்கம் போன்ற வசதிகளும் இடம்பெறுகிறதாம்.

Thalapathy Vijay House
நம்ம தளபதி விஜய் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின்( Tom Cruise ) மிகப்பெரிய ரசிகராம். இதனால் தற்போது தளபதி  கட்டிவரும் வீட்டை டாம் க்ரூஸ் வீட்டைப் போலவே கட்ட வேண்டுமென முடிவெடுத்து அதைப்போலவே கட்ட சொல்லியுள்ளாராம்.

தளபதி இந்த வீட்டை கட்டுவதற்கு சுமார் 100 கோடி ஒதுக்கியுள்ளாராம். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டுவருகிறது.