அது என்னவென்றால் இந்தியாவிலேயே அதிகளவு பயன்படுத்தப்படும் மொபைல் ஆப் டிக்டாக் (tik tok ) தான். அதில் பலர் அவர்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளின் பாடல்கள் டயலாக்குகளை அவர்களே dubsmash செய்து பார்ப்பதால் இந்த செயலி மிகவும் பிரபலமடைந்து உள்ளது.
அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு தளபதி விஜய்யின் பெயர்கொண்ட #ஹாஸ்டேக் பதிவுகள் 5 பில்லியன் வரை கடந்து தென்னிந்தியாவில் புதிய சாதனை படைத்துள்ளது
Makkal Thalapathy vijay tiktok record |
அதேபோல் தென்னிந்தியாவின் மற்றொரு நடிகரான அல்லு அர்ஜுன் தளபதி விஜய்க்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது பதிவுகள் சுமார் 4.6 பில்லியன் அளவுக்கு உள்ளது.
அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்திலும் #தளபதி எனும் ஹெஷ்டேக் சுமார் 4.3 பில்லியன் பதிவுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார் தளபதி விஜய்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழியிலுள்ள ஹீரோக்களில் தளபதி விஜய் தான் தற்போது நம்பர் 1 ஹீரோவாக டிக் டாக் செயலிலும் ஜொலிக்கிறார்.