உலக அளவில் தளபதியின் பிகில் படத்திற்கு YouTube கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!!

தமிழ் சினிமாவில் தளபதியின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவரின் படத்திற்கு வசூலும் வியாபாரங்களும் உலக அளவில் வளர்ச்சியடைந்தும் வருகிறது.


மேலும் தற்போது பல நடிகர்களின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது சமூக வலைதளம் தான்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் அதிக அளவு சமூக வலைதளம் மூலம் அதிக ரசிகர் பட்டாளங்களை வைத்துள்ளார், இதில் தல அஜித், சூர்யா போன்றவர்களும் அடங்கும்.

அதில் தளபதி விஜயின் ஒவ்வொரு படத்தின் போதும் யதாவது செய்தி வெளியானாலும் ஒடனே  அதனை தளபதியின் வெறித்தனமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக்கி விடுகின்றனர்கள்.

இதன்முலம் விஜய்யின் படத்திற்கு பைசா செலவில்லாமல் படத்திற்கு புரோமோஷன் ஆகிவிடுகிறது.

மேலும் சமூக வலைதளங்களில் முக்கியமாக கருதப்படும் facebook, twitter, instagram, YouTube போன்ற தளங்கள் ஒவ்வொரு வருடமும் எவையெல்லாம் டாப் 10ல் இடம்பெற்றனர் என்பதை வெளியிடுவார்கள் 

அந்தவகையில் 2019ஆம் ஆண்டு உலக அளவில் யூடியூபில் வெளியான ட்ரெய்லர்களின் அதிக அளவு லைக்குகள் பெற்ற ட்ரைலர்கள் லிஸ்ட்டை யூடியூப் வெளியிட்டுள்ளது. அதில் தளபதி விஜய்யின் பிகில் ட்ரெய்லர் 2.3 மில்லியன் லைக்குகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.



இதில் முதல் டாப் 10 இடத்தில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ்படம் தளபதியின் பிகில் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை படத்தின் எடிட்டர் ரூபன் அவர்களும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவலையும் தளபதியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்கள்.