நம்ம தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நட்சத்திரமாக விளங்குகிறார், இவருக்கு தமிழகம் தண்டிலும் உலகம் முழுவது ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
மேலும் இவரின் தற்போதைய அணைத்து படங்களும் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.
அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைத்து நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி படபிடிப்பு தளத்தில் ஒரு செல்பி எடுத்தார்.
அந்த செல்பியை தளபதி விஜய் தன் டுவிட்டர் பக்கத்திளும் பகிர்த்திருந்தார், அந்த செல்பி தற்போது வரை twitter ல் 1.3 லட்சம் பேர் ரீடுவிட் செய்துள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவில் ஒரு நடிகரின் டுவிட்டிற்கு அதிக ரீடுவிட் வந்தது இதுவே முதன் முறை, என்றும் மேலும் தளபதியின் சில டுவிட்டிற்கு 1 லட்சம் ரீடுவிட்ஸை தளபதி விஜய் பெற்றுள்ளார்.
இதன் மூலம் டுவிட்டரில் அதிக ரீடுவிட் செய்யப்பட்ட சாதனையில் இந்தியளவில் தளபதி விஜய் தான் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
இந்த தகவல் தளபதி ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் மேலும் இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Comments
Post a Comment