தளபதி விஜய் உன்னை நினைத்து படத்தில் இருந்து விலக்கியதற்கு காரணம் இதுதான்.. 18 வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை!
நம்ம தளபதி விஜய் இயக்குனர் விக்ரமன் கூட்டணியில் முதன் முதலில் உருவான திரைப்படம் பூவே உனக்காக. இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதனையடுத்து தளபதி விஜய்யுடன் விக்ரமன் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பேசி முடிவு செய்தனர்.
மேலும் தளபதி விஜய் பூவே உனக்காக படத்திற்கு பிறகு நிறைய காதல் சம்மந்தமான படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாகவும் கமர்சியல் ஹீரோவாகவும் மாறவேண்டும் என தளபதி நினைத்தார்.
அதனால் தான் வெங்கடேஷ் இயக்கத்தில் தளபதி பகவதி படத்தில் நடித்தார். இந்த படத்தில் கமர்ஷியல் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்து இருந்தது.
தளபதி விஜய் கமர்சியல் ஹீரோவாக மாறுவதற்கு ஆசைப்பட்டு தான் விக்ரமனின் உன்னை நினைத்து படத்திலிருந்து விலகி விட்டதாகவும், அதன் பிறகு அந்த படத்தில் சூர்யா நடித்தார் என்று செய்திகள் வெளிவந்தது.
ஆனால் அதில் உண்மை இல்லையாம். தளபதி விஜய்க்கும் விக்ரமனுக்கும் இடையில் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால். அந்த படத்தில் இருந்து விஜய் விலகிவிட்டாராம்.
மேலும் நம்ம தளபதிக்கும் விக்ரமனுக்கும் எந்த விதமான பிரட்சனைகளும் இல்லை என்றும் தற்போதும் தொடர்பில் தான் உள்ளார் என்றும் விக்ரமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment