நம்ம தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி65 படத்திற்கு தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றன. இதை சன் பிக்சர்ஸ் தளபதி65 தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட அனைத்தும் முடிவான நிலையில் இன்னும் எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை சன் பிக்சர்ஸ்.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தளபதி65 அப்டேட்காக தளபதி ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் சமீபகாலமாக சறுக்கல்களை சந்தித்து வரும் முருகதாஸ் அவர்கள் எப்படியாவது தளபதி65 படத்தின் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்று அனைத்து துறைகளிலும் கவனமாக பார்த்து வேலை செய்து வருகிறார்.
இதுவரை வந்த தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான படத்திலேயே இந்தப்படம் மிகப்பெரிய வசூலையும் பெயரையும் பெற்றுத் தரும் என முழுதும் நம்புகிறார்.
அதற்காக ஒவ்வொரு டெக்னீசியன்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகின்றர். மேலும் தளபதி விஜய்யின் படங்களில் எப்போதுமே சண்டைக் காட்சிகளுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் இருக்கும்.
அந்தவகையில் கேஜிஎப், கைதி படங்களில் பணியாற்றி சமீபத்தில் தேசிய விருது பெற்ற அன்பு அறிவு என்ற இரட்டை சகோதரர்கள் தான் இந்த படத்தில் இணைந்துள்ளார்களாம்.
இதனால் கண்டிப்பாக தளபதி65 படம் வசூலில் வேற லெவல் சாதனையை படைக்கும் என அனைவரும் தற்போதே நண்புகிறார்கள். மேலும் தளபதி விஜய் ரசிகர்களே எங்களுக்கு துப்பாக்கி 2, படம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Comments
Post a Comment