தளபதியின் பிகில் படம் செய்த மாபெரும் சாதனை- லிஸ்ட் லிஸ்டோடு தகவலை வெளிட்ட ரசிகர்கள்

நம்ம தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பிகில் திரைப்படத்தில் அப்பா ராயப்பன், மற்றும் மைக்கேல், பிகில் என மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பர்.


இந்த படம்  300 கோடியை கடந்து வசூல் சாதனையையும் செய்தது. இந்த படத்தை நேற்று  சன் டிவியில் திரையிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஏற்கனவே தளபதியின் பல படங்கள் மற்ற சானல்களிலும் ஒளிபரப்ப பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த லாக் டவுன் காலத்தில் தளபதியின் படங்கள் அணைத்து டிவி சேனல்களிலும் சேர்த்து பார்த்தால் அது 170 முறை ஒளிபரப்பப்பட்டுள்ளதாம்.

இந்த தகவலை ஒரு தீவிரமான தளபதி விஜய் ரசிகர் ரிப்போர்ட் சேர்த்துவைத்து இன்று வெளியீட்டுள்ளார்.

இந்த செய்தி தற்போது வலைதங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.

  • சன் தொலைக்காட்சி - 50
  • ஜெயா - 66
  • விஜய் - 18
  • ஜீ தமிழ் - 9
  • கலைஞர் - 9
  • மற்ற சானல்கள் - 18