தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சவாலை ஏற்ற தளபதி.. வைரலாகும் தளபதியின் லேட்டஸ்ட் புகைப்படம்.. தளபதி செமஅழகு

நம்ம தளபதி விஜய் தன்னுடைய சினிமா கேரியரில் ஒரு சில ரீமேக் படங்களில் நடித்துள்ளார். அதிலும் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து ஒக்கடு என்ற படத்தை தமிழில் கில்லி என்ற பெயரிலும், போக்கிரி  படத்தில் தளபதி நடித்துள்ளார்.

மேலும் தளபதி விஜய்க்கும் மகேஷ்பாபுக்கும் ஒரு நல்ல புரிதல் உள்ளது. மேலும் தளபதி விஜையுடன் சேர்த்து நடிக்க ஆசைப்படுவதாகவும் பல பேட்டிகளில் மகேஷ்பாபு நேரடியாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைத்து நடிகர் நடிகைகளும் தற்போது ஊரடங்கு சமயத்தில் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற பெயரில் தங்களுடைய வீடுகளில் மரம் நட்டுவிட்டு அதை மற்றொரு நடிகர் நடிகைகளை செய்யச் சொல்லுமாறு சவால் விட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மகேஷ் பாபு தனது பிறந்தநாள் அன்று தன்னுடைய வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். அதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தளபதி விஜய், ஜூனியர் என்டிஆர், போன்றோரை டேக் செய்து இந்த சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

அந்த சவாலை நம்ம தளபதி விஜய் ஏற்று தன்னுடைய வீட்டில் ஒரு மரக்கன்றை நட்டு வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதற்க்கு பல நட்சத்திரங்கள் தளபதியை வாழ்த்தி டுவிட் செய்து வருகின்றனர்.

தளபதி விஜய் அவர்கள் இதை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார் இதற்க்கு மகேஷ்பாபுவும் நன்றி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.



Comments