தளபதி விஜய்யின் மாஸ்டர் பட Quit Pannuda பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. செம குஷியில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் ஒவ்வொரு சின்ன தகவலும் தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் கொண்டாட வைத்து வருகிறது.

அந்தவகையில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் படம் தற்போது வரை வெளியாகவில்லை.

இதனால் தளபதி ரசிகர்கள் நீண்ட நாட்களாக மாஸ்டர் படத்தின் டிரைலரை வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்க்கு மாஸ்டர் பட குழு ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக அவ்வப்போது குறுச்செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மாஸ்டர் படத்தின் ஒவ்வொரு லிரிக் வீடியோக்களும் ரசிக்கும்படி வடிவமைத்து வெளியீட்டுவருகின்றனர்.

இதில் வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி, அந்த கண்ண பார்த்தாகா, வாத்தி ரெய்டு போன்ற பாடல்களின் லிரிக் வீடியோக்கள் வெளியாகி விட்டன. அடுத்ததாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் நிரம்பியிருப்பது குவிட் பண்ணுடா ( #QuitPannuda ) என்ற பாடல்தான்.

இந்த பாடல் ஆடியோவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்த நிலையில் லிரிக் வீடியோவுக்காக ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் குவிட் பண்ணுடா லிரிக் விடியோ வெளியாக உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. சமீபத்தில்தான் சென்சார் முடிவடைந்த நிலையில் அந்த பாடலுக்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனால் தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டுள்ளனர்.

Comments