விஸ்வாசம் படத்தின் வாழ்நாள் சாதனையை ஐந்தே நாட்களில் முறியடித்த மாஸ்டர்!!!

தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்களுக்கு இந்தியளவில் வரவேற்பு அதிகம்.

அந்த வகையில் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது, தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனை புரிந்தது.

மேலும் தற்போது விஜய்யின் மாஸ்டர் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது மற்றும் அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தல அஜித்தின் விஸ்வாசம் பட ட்ரைலர் யூடியூபில் இதுவரை 33.3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. ஆனால் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட டீசர் வெளியான 5 நாட்களில் 33.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதை வைத்து தற்போது இருதரப்பு ரசிகர்களும் இணையத்தில் மோதி வருகின்றனர்.





Comments