Thalapathy 65 Update தளபதி 65 படத்தின் இயக்குனர் உறுதியானது சன் பிக்சர் தரப்பில் முதல்கட்ட வேலைகள் ஆரம்பம்
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன்
பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருந்த படம் தளபதி 65. ஆனால் சில தவிர்க்க
முடியாத காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார் இயக்குனர் ஏ.ஆர்.
முருகதாஸ்.
இவர் விலகிய பிறகு பல முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர் தான் என்று பல செய்திகள் வந்தன. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்க விருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.
அனிருத் சிபாரிசு செய்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தளபதி விஜய்யிடம் காமெடி கதை ஒன்றை கூறினாராம். அந்த கதை விஜய்க்கு பிடித்து போக நெல்சன் திலீப் குமாரை ஓகே செய்து விட்டாராம் விஜய்.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இந்த கதை பிடித்து விட்டதாம். இதனால் " டாக்டர் " படத்தின் மீதம் உள்ள காட்சிகளை எடுத்து முடித்தவுடன், தளபதி 65 படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கில் இறங்க போகிறாராம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்
Comments
Post a Comment