Thalapathy Urgent Meeting with Makkal Iyakkam Members மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தளபதி விஜய் அவசர ஆலோசனை

சமீபத்தில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் திடீரென தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தார் 

இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என்றும் 
.
அந்த கட்சியில் உள்ளவர்கள் தனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்

இதனால் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏசி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டதாக கோலிவுட்டில் செய்தி பரவியது. 

இந்த நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சியை தொடங்க முயற்சித்துள்ள நிலையில், விஜய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் திடீரென இன்று விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்னும் சில மணிநேரங்களில்  30 மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்துப் பேச உள்ளதாகவும் இந்த சந்திப்பு பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த சந்திப்பின் போது தனது தந்தை தொடங்கும் கட்சியில் இணைய வேண்டாம் என மீண்டும் விஜய் ரசிகர்களிடம் கேட்டுக் கொள்வாரா? அல்லது அரசியல் கட்சி குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 





Comments