தளபதி விஜய் நேற்று இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சந்திப்பானது தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளிவருகிறது.
இந்த சந்திப்பின்போது ’மாஸ்டர்’ பட விவகாரம் குறித்து இருவரும் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
மாஸ்டர்’ திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் வேலுமணி உடன் இருந்ததாகவும், தேர்தல் நேரம் என்பதால் விஜய்யின் ரசிகர்களை கவர விஜய் தரப்பின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வகையில் விரைவில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கும் அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வெளிவரும் என்றும் எதிர்பார்க்க படுகிறது.
Comments
Post a Comment