லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் 65வது படத்தை யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆனால் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தான் தளபதி விஜய் நடிக்க போவதாகவும், அப்படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று இரவு இயக்குனர் அட்லீயின் அலுவலகத்திற்கு விஜய் சென்றுள்ளார். இதனை வைத்து தளபதி 65 படத்தை அட்லீ இயக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தது.
மேலும் அட்லீ தளபதியை வைத்து மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தளபதி 65 படத்தின் அறிவிப்பானது மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்கு பிறகே இருக்கும் என்று தகவல்கள் வந்துள்ளது.
Comments
Post a Comment